Sunday, December 6, 2015

பிரதமர் மோடியை தற்கொலைப்படை மூலம் கொல்ல திட்டம் தீட்டி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போல் நாட்டின் தலைநகர் டெல்லியிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும், கையெறி குண்டை வீசவும் லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளது.
இந்த சதித்திட்டத்துடன் தீவிரவாத அமைப்பின் தளபதி அபு துஜானா என்பவனின் துணையுடன் 4 தீவிரவாதிகள் கடந்த மாதமே இந்தியாவிற்குள் நுழைந்ததாக தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ க்கும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவிற்கும் இந்த சதித்திட்டத்தில் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய உளவுத்துறை மற்றும் டெல்லி, ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டத்துடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடியை குறிவைக்கும் தற்கொலைப்படை: இந்தியாவிற்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா

Saturday, December 5, 2015

டெல்லி:

 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ரஹானேவின் சதம், அஸ்வினின் அரை சதம் உதவியுடன், 334 ரன்களை குவித்தது. அடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 121 ரன்களிலேயே சுருண்டு ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென் ஆப்பிரிக்காவைவிட 403 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது இந்தியா. மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ரஹானே 127 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்ததன் உதவியோடு, இந்திய அணி 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் அப்பாட் 5 விக்கெட்டுகளையும், டேன் பியேட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வழக்கம்போல அந்த அணி சீட்டுக்கட்டு போல சரிந்தது. அணியின் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி 121 ரன்களில் சுருண்டது. 213 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் 3, தவான் 21, புஜாரா 28 ரன்களில் அவுட்டான நிலையில், கோஹ்லியும், ரஹானேவும் களத்தில் நங்கூரம் போட்டனர். ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 190 ரன்கள் எடுத்துள்ளது. கோஹ்லி 83 ரன்களுடனும், ரஹானே 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவைவிட 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கோஹ்லி மற்றும் ரஹானே சதங்களை கடப்பதற்காக இந்திய அணி காத்திருப்பதாக தெரிகிறது. சதம் கடந்ததும், டிக்ளேர் செய்ய இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டுவது பெரும் சவாலாகும்.

2வது இன்னிங்சிலும் இந்தியா ஆதிக்கம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு காத்திருக்கிறது இமாலய இலக்கு!

சென்னை: 

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது படப்பிடிப்புகளை ரத்து செய்து உதவி செய்யும் பணியில் நடிகர்கள் கார்த்தி, விஷால் களமிறங்கி இருக்கின்றனர். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும் பணிகளில் நடிக,நடிகையர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பணியில் தற்போது ஏராளமான நடிக, நடிகையர் கைகோர்த்து உள்ளனர். நடிக, நடிகையர் தமிழகம் மற்றும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகைகள் கனிகா, ஷாலினி அஜீத் ஆகியோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். விஷால், கார்த்தி இந்நிலையில் விஷால் மதுரையில் நடந்த மருது படப்பிடிப்பை ரத்து செய்தும், கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த தோழா படப்பிடிப்பையும் நிறுத்தி விட்டும் சென்னை திரும்பினர். ரெஸ்க்யூ சென்னை குரூப் இவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப்பில் 'ரெஸ்க்யூ சென்னை குரூப்' என்ற பெயரில் ஒரு குரூப்பை உருவாக்கினர்.இந்த குரூப்பில் நடிகர்கள் நாசர், எஸ்.வி.சேகர், ராஜேஷ், விக்ரம் பிரபு, அதர்வா, அருள் நிதி, பொன்வண்ணன், மனோபாலா, உதயநிதி, கருணாஸ், சாந்தனு, ஜூனியர் பாலையா, ரமணா, நந்தா, உதயா, ஸ்ரீமன், பூச்சிமுருகன், பாடகர் கிரிஷ், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, குட்டிபத்மினி, லலிதாகுமாரி, சோனா, கோவைசரளா, சங்கீதா உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டனர். உணவு மற்றும் துணிமணிகள் இந்த குரூப்பின் மூலம் பால் பவுடர், துணிமணிகள், உணவு மற்றும் போர்வைகளை சேகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வருகின்றனர்.மேலும் திருப்பூர் நகரத்தில் இருந்தும் துணிகளை வரவழைத்து இவர்கள் உதவி செய்து வருகின்றனர். வடசென்னை விஷால் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதியிலும், கார்த்தி கே கே நகர் மற்றும் வேளச்சேரி பகுதிகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த உதவிப் பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களும் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெஸ்க்யூ சென்னை குரூப்' வாட்ஸ் ஆப் மூலம் களத்தில் குதித்த நடிக, நடிகையர்